• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுர்த்தி குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வீடொன்றினையும் கடையொன்றையும் தாபிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
- உணவு விநியோக வலையமைப்பை பலப்படுத்துவதற்காக சமுர்த்தி குடும்பங்களிலிருந்து 25,000 இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வீடொன்றினையும் கடையொன்றையும் தாபிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏனைய உரிய வரிசை அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் இணைத்து நடைமுறைப்படுத்துவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது கருத்திட்டம் சார்பில் தேசிய மட்டத்தில் வழிகாட்டலானது பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய செயலணியினாலும் கருத்திட்டத்தின் கையாள்கையானது சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினாலும் மேற்கொள்ளப்படும். நாடு முழுவதையும் தழுவும் விதத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டமானது நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் 100,000 கிலோ மீற்றர்கள் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 100,000 கிலோ மீற்றர்கள் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுக்கு அருகாமையில் உத்தேச வீடுகளும் விற்பனை நிலையங்களும் நிர்மாணிக்கப்படுவதோடு, இந்த வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்கள் 200, 300, 400, 500 சதுர அடிகள் கொண்டவையாக தேவைக்கேற்ப நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.