• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சாலிகா விளையாட்டரங்கு மற்றும் விளையாட்டு கட்டடத்தொகுதி அமைந்துள்ள 'அன்டர்சன் கொல்ப்லிங்ஸ் மைதானம்' என்னும் காணியை இறையிலி கொடையொன்றாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உடைமையாக்குதல்
- விஸ்தீரணத்தில் 3.4125 ஹெக்டயார்கள் கொண்ட சாலிகா விளையாட்டரங்கு மற்றும் விளையாட்டு கட்டடத்தொகுதி அமைந்துள்ள 'அன்டர்சன் கொல்ப்லிங்ஸ் மைதானம்' என்னும் காணி 1966 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பிலுள்ளது. இந்த காணியை வேறுதரப்புக்கு விற்பனை செய்யும் உரிமையை வழங்காதிருப்பதற்கும் இதன் அபிவிருத்தி செய்யப்படாத பெறுமதியை அரசாங்கத்திற்கு அறவிட்டுக் கொள்வதற்கும் உட்பட்டு, அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கொடையொன்றாக கொடைப்பத்திரமொன்றின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினாலும் காணி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.