• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நிலைமை காலப் பகுதியில் கல்வி முறைமையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தொலைக்காட்சி சேவைகளின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்ள
- தொற்று நிலைமை காரணமாக 2020 மார்ச் மாதத்தில் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 5 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர் தரம்) கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் "ஐ அலைவரிசை" மற்றும் "நேத்ரா அலைவரிசை" என்பவற்றை ஒருங்கிணைத்து தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட "குரு கெதர" நிகழ்ச்சித்திட்டமானது ஒளிபரப்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது பாடசாலை தவணை ஆரம்பிப்பது தாமதப்பட்டமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்படுவதனை தவிர்ப்பதற்காக "குரு கெதர" நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தரம் மூன்றிலிருந்து தரம் 13 வரை சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை "ஐ அலைவரிசை" மற்றும் "நேத்ரா அலைவரிசை" என்பவற்றுடன் கூட்டாக நடைமுறைப்படுத்தலானது 2020 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, "குரு கெதர" கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.