• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்
- தொழினுட்ப, வர்த்தக, திறன் மற்றும் சுற்றாடல் போன்ற தொழில் துறையின் தற்கால தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஏதுவாகும் கைத்தொழில் கொள்கைகளைத் தயாரிப்பதற்கு நடைமுறையிலுள்ள 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென்பது தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் உரிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறையின் கைத்தொழில் அமைப்புகள் / கைத்தொழில் சபையின் பிரதிநிதிகளைக் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்காக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.