• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் கொடைகள் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடுகள் மீளாய்வு மற்றும் ஆணைகோரும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் போது பிணைப் பொறுப்புத் தொகையொன்றை வைப்புச் செய்யக்கூடிய விதத்தில் சட்டங்களைத் திருத்துதல்
- தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தலை தடுக்கும் நோக்கில் 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு முரணாக செயலாற்றும் தொழில்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தொழில் கொள்வோருக்கும் தொழிலாளருக்களுக்கும் இடையில் ஏற்படும் தொழில் பிணக்குகளை துரிதமாக நியாயமான ரீதியில் தீர்ப்பதற்கென 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களின் கீழும் தொழிலாளர் தரப்புக்கு சார்பாக கட்டளைகளை வழங்கும் சந்தர்ப்பங்களில் இந்த கட்டளைகளின் நடைமுறைப்படுத்தலைத் தடுக்கும் பொருட்டு சில தொழில் கொள்வோர்களினால் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு செல்லும் போக்கு நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் உரிய கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 15-20 வருடகாலம் கடந்துள்ள சந்தர்ப்பங்களும் நிலவுகின்றதெனவும் இந்தக் காலப்பகுதியில் தொழில் கொள்வோர் மரணித்தல், வௌிநாடுகளுக்குச் செல்தல், நீதிமன்றத்திற்கு வருகை தராதிருத்தல், கம்பனிகளை கலைத்து மூடுதல் போன்ற காரணங்களினால் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கு முடியாமற் போயுள்ளதெனவும் தெரியவந்துள்ளது. ஆதலால், 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் அதிபதியின் கட்டளைகளுக்கு எதிராக அல்லது குறித்த கட்டளைகளுக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கான நீதவான் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அல்லது 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தொழில் நடுத்தீர்ப்புக்கு அல்லது தொழில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சேவை கொள்வோரினால் நீதிமன்ற நடவடிக்கையொன்றுக்கு செல்லும் போது பிணைத்தொகையொன்றை வைப்புச் செய்ததன் பின்னர் மாத்திரம் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தையும் திருத்தும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.