• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசை நவீனமயப்படுத்த
- இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனமொன்றாவதோடு, இது நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்குகின்றது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் வழமையான நடவடிக்கைமுறைகளை மாற்றத்திற்கு உள்ளாக்கி இலங்கை பொலிசை நவீனமயப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன்கீழ் நவீன வழிமுறைகளுக்கு அமைவாக வாகன போக்குவரத்தினைக் கையாளும் செயற்பாட்டினை பயனுள்ள வகையிலும் செயல்திறன் மிக்கதாகவும் நடாத்தும் தேவையும்கூட இனங்காணப்பட்டுள்ளது. முக்கியமாக நகர பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொலிஸ் வாகன போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிகளை வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி, முன்னுரிமையளித்து இலங்கை பொலிசின் முழுமொத்த நவீனமயப்படுத்தல் பணிகளை கையாள்வதற்கும் நடைமுறைபடுத்துவதற்குமாக கருத்திட்ட மொன்றைத் திட்டமிடும் பொருட்டு வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.