• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'வாரி சௌபாக்கியா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குளங்கள் / அணைக்கட்டுகளின் ஒதுக்க எல்லைகளை அடையாளமிடும் அளவீட்டு பணிகளை மேற்கொள்தல்
- 'வாரி சௌபாக்கியா' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எதிர்வரும் நான்கு (04) வருட காலப்பகுதிக்குள் சுமார் 5,000 குளங்கள் / அணைக்கட்டுகளை சீர்திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய அதிகளவான குளங்களின் அளவைப் பணிகளை மூன்று (03) வருட காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு தற்போது அளவைத் திணைக்களத்திடம் போதுமான மனிதவளங்கள் இல்லாமை பற்றி இந்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை சப்பிரசமுவ பல்கலைக்கத்தில் அல்லது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை மேற்கொண்டு அளவைப் பயிற்சியை எதிர்பார்த்துள்ள 70 மாணவர்களை தற்காலிக அடிப்படையில் மூன்று (03) வருட காலத்திற்கு பயிலுநர்களாக அளவைத் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்து அவர்களை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு இணைத்துஅளவைத் திணைக்களத்தின் இரண்டு (02) சிரேட்ட அளவையாளர்களின் மேற்பார்வையின் கீழ் அளவைப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினாலும் காணி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.