• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரக்வான கால்நடை மருத்துவ அலுவலகத்தை நிர்மாணிப்பதற்காக காணித் துண்டொன்றை ஒதுக்குதல்
- சப்பிரகமுவ மாகாண விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் ரக்வான கால்நடை மருத்துவ அலுவலகம் தற்போது நடாத்திச் செல்லப்படும் கட்டடமானது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித் துண்டொன்றை பெறுமதியினை அறவிடாது குறித்தொதுக்குவதற்கு ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்டக் கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ஹதர்லி தோட்டத்திலிருந்து 0.15 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை நட்டஈடு செலுத்தாது ரக்வான கால்நடை மருத்துவ அலுவலகத்தை நிர்மாணிப்பதற்காக குறித்தொதுக்கும் பொருட்டு அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.