• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளைத் தொடர்தல்
- COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவைகளை நடாத்திச் செல்வதற்காக பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து அறவிடப்படும் இற்றைப்படுத்தல் கட்டணம், தாமதக் கட்டணம், கேள்விக் கட்டணம், பதிவேட்டுக் கட்டணம், நுழைவுப் பத்திரக் கட்டணம் மற்றும் அதிவேகப் பாதையின் தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் என்பவற்றை 2020 ஆம் ஆண்டு இறுதிவரை விடுவிக்கும் பொருட்டு 2020 நவெம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பேருந்து சேவைகளை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு மேலும் காலம் எடுக்குமென தெரிய வருகின்றமையினால் வழங்கப்பட்ட சலுகைகளிலிருந்து பின்வரும் சலுகைகளை 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை மேலும் வழங்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வருடாந்த கேள்வி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அல்லது 15,000/- ரூபா என்னும் பெறுமதிகளில் கூடிய பெறுமதியுடனான தொகையினை அறவிடுத்தல்.

* அதிவேகப் பாதையின் தற்காலிக அனுமதிப்பத்திர கடடணத்திலிருந்து 10 சதவீதத்தை அறவிடுத்தல்.

* பதிவேடு மற்றும் நுழைவு அனுமதிப்பத்திர கட்டணங்களுக்கு விலக்களித்தல்.