• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோர்வே அரசாங்கத்தின் தொழிநுட்ப உதவியுடன் இலங்கையின் சமுத்திர வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கைக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ் 'இலங்கையின் சமுத்திர வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்தும்' கருத்திட்டத்தின் I ஆம் கட்டமானது 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் II ஆம் கட்டமும் நோர்வே உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் கீழ் இலங்கையில் சமுத்திர வளங்கள் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கத்தின் சமுத்திர ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மை (NARA) போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் இந்த கட்டத்தின் கீழ் கடற்றொழில் தரவுகளைச் சேகரித்தல், தரவுகளை களஞ்சியப்படுத்தல் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துதல், சமுத்திர கடல் வளத்தை நிலைபேறாக முகாமித்தல் சார்பில் கடற்றொழில் ஆராய்ச்சி இயலளவை விருத்தி செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் (NARA) நோர்வே அரசாங்கத்தின் சமுத்திர ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.