• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களை கட்டடமொன்றில் தாபித்த
- தற்போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பல இடங்களில் நடாத்திச் செல்கின்றமையினால் அமைச்சையும் இந்த நிறுவனங்களையும் ஒரே கட்டடத்தில் தாபிக்கும் தேவை எழுந்துள்ளது. இதன் பொருட்டு கொழும்பு 10, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் சார்பில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டடம் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கட்டடம் மற்றும் அது அமைந்துள்ள காணியை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் அதன் பின்னர் நிர்மாணிப்பு பணிகளை பூர்த்தி செய்து அமைச்சையும் அதன் கீழான சகல நிறுவனங்களையும் இந்த கட்டடத்தில் தாபிப்பதற்குமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.