• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- பாகிஸ்தான் COMSATS பல்கலைக்கழகத்தின் உயிரியல் பொருட்கள் தொடர்பிலான ஆராய்ச்சி நிலையமானது உயிரியல் பொருட்கள், இழைம பொறியியல் துறைகளுக்குரிய சருவதேச புலமைச் சொத்துக்கள் பலவற்றை உரிமையாகக் கொண்டுள்ள நிறுவனமொன்றாகும். இந்த பல்கலைக்கழகத்துடன் உயிரியல் பொருட்கள், இழைம பொறியியல், மீளுருவாக்க மருத்துவ விஞ்ஞானம், உணரிகள் மற்றும் உயிரியல் உணரிகள் போன்ற துறைகளுக்குரிய அறிவினை பரிமாறிக் கொள்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் என்பன தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. இதற்கிணங்க, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.