• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்பு கல்லூரியை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றுப்படுத்த
- 'தேசிய பாதுகாப்பு கல்லூரியை' பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைப்ப தற்காக 'இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டத்தை' வரையும் பொருட்டு 2019 திசெம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் 2021 மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, 11 மாத கால முழுநேர பாடநெறியொன்றினை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் பட்டதாரிகளுக்கு ndc தகைமையினை வழங்குவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் இந்த சட்டத்தின் ஊடாக செய்யப்படும். உலகின் பெரும்பாலான நாடுகளினால் அந்தந்த நாடுகளின் தேசிய பல்கலைக்கழகங்கள் இணைந்து தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் ஊடாக ndc பாடநெறிக்கு ஒருங்கிணைவாக முதுகலை அல்லது கலாநிதி பட்டங்களை வழங்குகின்றன. ஆதலால், இந்த விடயத்தினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்டதாரிகளுக்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் பட்டப்பின் படிப்பு பட்டங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றுப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.