• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021‑01‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பு
- பின்வரும் சட்டமூலங்களை தயாரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கருதுகோள் பத்திரங்களை பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது தொடர்புபடுத்தப்பட்டது. இந்த உபகுழுவின் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய சட்டமூலங்களை தயாரிக்கும் பொருட்டு சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் தலைவராக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திலுள்ள பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை ஆக்குதல்.

* முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து (திருத்த) சட்டமூலம்.

* தண்டனை சட்டக்கோவையைத் திருத்துதல் (19 ஆம் அத்தியாயம்) (கண்ணியமான நடத்தை, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல், போலியான செய்திகள் மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள்).

* 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை சட்டத்தை திருத்துதல் (கண்ணியமான நடத்தை, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல், போலியான செய்திகள் மற்றும் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள்).