• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளைஞர் படையணி சட்டத்தை நீக்கி, இளைஞர் படையணியை அதிகாரசபையொன்றாகத் தாபித்தல்
- 2002 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இளைஞர் படையணி சட்டத்தை நீக்கி, இளைஞர் படையணியை அதிகாரசபையொன்றாகத் தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2011 திசெம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதலால் 2002 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இளைஞர் படையணி சட்டத்தை நீக்கி இளைஞர் படையணி அதிகாரசபையொன்றை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை உள்ளடக்கி உரிய சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.