• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1928 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தாவரவியற் பூங்கா கட்டளைச்சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- 1973 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ள 1928 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தாவரவியற் பூங்கா கட்டளைச்சட்டமானது தேசிய தாவரவியற் பூங்கா திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் முக்கியமாக ஏற்புடையதாகும். சுமார் 90 வருடங்கள் பழைய இந்த கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.