• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெக்கிராவ - தலாவ - கனேவல்பொல - தச்சிஹல்மில்லாவ வீதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கான ஆறு (06) சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகளை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாணத்தின் கெக்கிராவ - தலாவ - கனேவல்பொல - தச்சிஹல்மில்லாவ வீதியை புனரமைத்தல், விருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கான ஆறு (06) சிவில் வேலை ஒப்பந்தப் பொதிகள் சார்பில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.