• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக துறைகளின் அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு என்பன பொருட்டு கடன் வசதிகளை வழங்குவதற்கான 'சுவசக்தி' கடன் திட்டத்தை திருத்துதல்
- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் அபிவிருத்தி மற்றும் தொழில் உருவாக்கம் என்பன பொருட்டு கடன் வசதிகளை வழங்குவதற்காக 'சுவசக்தி' கடன் திட்டத்தை திருத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2020 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடன் தொகையிலிருந்து 58 சதவீதம் தற்போதுள்ள வர்த்தக நடவடிக்கைகள் சார்பிலும் 42 சதவீதம் புதிய வர்த்தக நடவடிக்கைகள் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, உரிய கடன் திட்டத்தின் கீழ் புதிய உற்பத்திகள் அல்லது சந்தைவாய்ப்பினை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் தற்போதுள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் 'சுவசக்தி' கடன் திட்டத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்கும் அதன் கீழ் 2 மில்லியன் ரூபாவை விஞ்சாத கடன் வசதிகளை வழங்குவதற்குமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.