• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'கம சமக பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள வத்தேகெதர குளத்தின் நிர்மாணிப்பு
- மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஹிம்பிலியாகடவில் நடாத்தப்பட்ட 'கம சமக பிலிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தில் ஹிம்பிலியாகட குளத்தினால் போசிக்கப்படும் 1,300 ஏக்கர் காணி சார்பில் நிலவும் நீர்ப் பற்றாக்குறைக்கு மாற்று வழியினை ஏற்பாடு செய்வதன் மூலமும் புதிதாக பயிர் செய்யக்கூடிய மேலும் சுமார் 1,010 ஏக்கர் காணிக்கு நீரினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு உயர் வருமான வழியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கெம்புரு ஓயா ஊடாக வத்தேகெதர குளம் மற்றும் தொடம்கொல்ல குளம் என்பவற்றை நிர்மாணித்து களுகங்கை நீர்த்தேக்கத்தின் வலதுகரை பிரதான கால்வாயிலிருந்து 1,800 மீற்றர் சுரங்கப் பாதையூடாக வத்தேகெதர குளத்திற்கும் ஹிம்பிலியாகட குளத்திற்கும் நீர் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 7,155 மில்லியன் ரூபா ஆவதோடு, நிர்மாணிப்பு பணிகள் மூன்று வருட (2021 - 2023) காலப்பகுதிக்குள் பூர்த்திசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க நீர்ப்பாசன திணைக்களத்தின் இயந்திர சாதனங்களை பயன்படுத்தியும் இலங்கை தரைப்படையினதும் பிரதேச வாழ் மக்களினதும் ஊழிய பங்களிப்புடனும் 2021 ஆம் ஆண்டில் வத்தேகெதர குள நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கும் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஏற்பாட்டினை 2021 - 2023 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ஒதுக்கிக் கொள்வதற்குமாக நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.