• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவ, தம்மன்னாகமவில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி மற்றும் கட்டடங்களை இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
- ஆனமடுவ, தம்மன்னாகமவில் அமைந்துள்ள 3.585 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய கம்முதாவ காணி மற்றும் அதிலுள்ள சகல கட்டடங்களும் விசேட கொடைப்பத்திரமொன்றின் ஊடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஆனமடுவ வலய நிலையத்தினை ஆரம்பிப்பதற்காக இந்த காணி மற்றும் கட்டடங்களை கையளிக்குமாறு இந்த நிறுவனத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி மற்றும் கட்டடங்களை மீண்டும் அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொண்டு இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு இறையிலி கொடைப்பத்திரமொன்றின் மூலம் உடைமையாக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.