• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்: வரிச் சட்டங்களைத் திருத்துதல்
- 2021 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் பொருளாதாரத்தின் சகல தரப்பினர்கள் சார்பிலும் எளிமையான, வௌிப்படைத்தன்மைவாய்ந்த மற்றும் வினைத்திறன்மிக்க வரி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த வரி பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமூலங்களை தயாரிப்பதற்கும் இதற்குரிய ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.