• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் சர்வதேச நிறுவனத்திற்கும் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் சர்வதேச நிறுவனத்திற்கும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.