• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசுக்காக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்தல்
- நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமாதானத்தை பாதுகாக்கும் பணிகள் கையளிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமொன்றான இலங்கை பொலிசுக்கு அதன் பணிகளை முறையாக நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு வாகனங்கள் இல்லாமையினால் இதற்கான துரித தீர்வொன்றாக 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.