• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றாடல் நட்புறவு மிக்க சேதன பசளையினை விநியோகிக்கும் முன்னோடிக் கருத்திட்டம் - நெற்செய்கைக்காக 2021 சிறுபோகத்தில் பசளை விநியோகம்
- 2020 சிறுபோகத்திலும் 2020 / 2021 பெரும்போகத்திலும் சுற்றாடல் நட்புறவு மிக்க சேதன பசளையினை மேம்படுத்துவதற்கு தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயி களுக்கு சேதன பசளை மற்றும் சேதன திரவப் பசளை வழங்கும் முன்னோடிக் கருத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னோடி கருத்திட்டத்தின் பயனை தீர்மானிப்பதற்கு ஆகக்குறைந்தது 04 போகங்கள் இந்த முறையின் கீழ் பயிரிடுதல் வேண்டும். இதற்கிணங்க இந்த முன்னோடி கருத்திட்டத்தை தொடர்ந்தும் 2021 சிறுபோகத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான சேதன பசளை மற்றும் சேதன திரவப் பசளை என்பவற்றை பசளை ஆலோசனை குழு அங்கீகரித்துள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு உரிமப்பத்திரம் கொண்டுள்ள பசளை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு இணக்கப் பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு, உரிய மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு பசளை வழங்குவதற்குமாக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.