• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டம்
- COVID - 19 வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு நாட்டின் மொத்த சனத்தொகையின் 14 மில்லியன் பேர்களுக்கு COVID - 19 தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க பதில் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Covax வசதியின் கீழ் COVID - 19 தடுப்பூசி பெற்றுக் கொள்வதை துரிதப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் Covax பொறிமுறையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நியம நட்டோத்தரவாத உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்.

* இந்தியாவின் The Serum Institute life Sciences Private Limited நிறுவனத்திடமிருந்து நேரடி கொள்வனவொன்றாக 10 மில்லியன் Oxford AstraZeneca தடுப்பூசிகளை 52.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்தல்.

* பிரித்தானியாவின் AstraZeneca நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 3.5 மில்லியன் COVID - 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் இந்த நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்தல்.