• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் அமைச்சு அலுவலக மனையிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கி புதிய அலுலவலக மனையிடத்தில் அமைச்சைத் தாபித்தல்
- கைத்தொழில் அமைச்சு தற்போது நடாத்திச் செல்லப்படும் காணியானது ஏக்கர் 01 பேர்ச்சர்ஸ் 07 விஸ்தீரணம் கொண்டதாகும். இது பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் உயர் பெறுமதியுடன் கூடிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த காணியின் தற்போதைய பெறுமதி சுமார் 2.32 பில்லியன் ரூபாவாகுமென அரசாங்க விலைமதிப்பீட்டாளரினால் மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் மிக பயனுள்ள நடவடிக்கையொன்றிற்கு இந்த காணியை பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இதனை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குவதற்கும் அதற்கு பதிலாக தேவையான தளபாடங்கள் உட்பட ஏனைய வசதிகளுடன் 50,000 சதுரஅடிகள் கொண்டதும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுமார் 75 வாகனங்களை நிறுத்திவைக்கக்கூடிய வசதிகளுடனான கட்டடமொன்றை கைத்தொழில் அமைச்சுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.