• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- உள்நாட்டு கைத்தறி மற்றும் பத்திக் துணிகள் இறக்குமதியினை ஒழுங்குறுத்துதல் , மீன்பிடி படகுகள், பயணிகள் படகுகள் மற்றும் படகுகள் இறக்குமதியை ஒழுங்குறுத்துதல் உட்பட உள்நாட்டு கைத்தொழிலுக்குத் தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத தெரிவுசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வரையறைகளை தளர்த்துதல் போன்ற நோக்கங்களுக்காக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை உள்ளடக்கி 2020‑12‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 2206/5 ஆம் இலக்கத்தைக் கொண்டதும் 2020‑12‑24 ஆம் திகதியிடப்பட்டதும் 2207/15 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.