• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையம் என்பவற்றின்பால் விமான கம்பனிகளை ஈர்ப்பதற்கான விசேட சலுகைகளை வழங்குதல்
- சுற்றுலாத்துறை அமைச்சினாலும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினாலும் தயாரிக்கப்பட்ட விசேட நேர அட்டவணைக்கு அமைவாக செயற்படுத்தப்படும் சருவதேச வாடகை விமானப் பயண செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலும் கொழும்பு ரத்மலான சர்வதேச விமான நிலையத்திலும் விமானங்களை தரை இறக்குவதற்கும் நிறுத்தி வைப்பதற்குமான கட்டணங்களிலிருந்து விலக்களிப்பதற்காக 2020 திசெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையினை மேலும் 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.