• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்களுக்கு அவர்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஒத்தாசை நல்குவதற்கும் விசேட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 2,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 2021-2025 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த அமைச்சினால் பின்வரும் கருத்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கிராமிய கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை செய்கை பண்ணும் நிகழ்ச்சித்திட்டம்.

* தேசிய மூலப் பொருள் வங்கியினைத் தாபித்தல்.

* கிராமம் ஒன்றுக்கு தொழில்முயற்சி ஒன்றினை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்.

* மர உற்பத்தி சார்ந்த நிர்மாணிப்பு மற்றும் வடிவமைப்பு நிலையமொன்றைத் தாபித்தல்

* கிராமிய மற்றும் பாரம்பரிய கைத்தொழில் கிராமங்கள் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்.

* கிராமிய கைத்தொழில்கள் சார்பில் உள்நாட்டு வௌிநாட்டு சந்தைகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்.