• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பொது போக்குவரத்துத் துறை சார்பில் முற்கொடுப்பனவு அட்டைகளின் மூலம் கட்டணங்களை அறவிடும் மின்னணு முறைமை யொன்றை அறிமுகப்படுத்தல்
- இலங்கையில் பொது போக்குவரத்துத் துறையானது பணமாக கட்டணம் அறவிடுவதன் மீது செயற்படுவதோடு, இதன் காரணமாக எழும் இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில் பொது போக்குவரத்து பேருந்து வண்டிகளிலும் புகையிர தங்களுக்காகவும் பயன்படுத்துவதற்காக முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய சகல நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை கொண்ட செயற்பாட்டுக் குழுவொன்றினை நியமிப்பதற்கு 2018 ஒக்றோபர் மாதம் 02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் அதன் துணை நிறுவனமொன்றான நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு கம்பனியொன்றான Lanka Clear (Pvt.) Ltd., கம்பனி உத்தேச பயண முற்கொடுப்பனவு அட்டை கருத்திட்டத்திற்கு பிரேரிப்பொன்றை முன்வைத்துள்ளதோடு, இந்த கருத்திட்ட பிரேரிப்பினை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்துத் துறை சார்பில் முற்கொடுப்பனவு போக்குவரத்து அட்டையினை நாட்டில் பயன்படுத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.