• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன உர கொள்வனவு - 2021 சிறுபோகம் - ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வழங்கல்
- 2021 சிறுபோகத்தின் போது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் விநியோகிப்பதற்காக வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Company Ltd., நிறுவனம் என்பன இரசாயன உர கொள்வனவின் பொருட்டு சர்வதேச ரீதியில் போட்டி விலை மனுக்களைக் கோரியுள்ளன. இந்த விலைகள் சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வருமாறு பசளை கொள்வனவினை கையளிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 40,500 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) + 5%, 270 நாட்கள் கொண்ட கடன் கால எல்லையின் கீழ், மெற்றிக் தொன் ஒன்று 343.10 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் சிங்கப்பூரின் M/s. Swiss Singapore Overseas Enterprises (Pvt.) Ltd., நிறுவனத்திடமிருந்தும்.

* 8,500 மெற்றிக் தொன் யூரியாவை (Prilled) + 5%, 180 நாட்கள் கொண்ட கடன் கால எல்லையின் கீழ், மெற்றிக் தொன் ஒன்று 364.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Valency International Pte. Ltd. நிறுவனத்திடமிருந்தும்.

* 13,900 மெற்றிக் தொன் Murate of Potash + 5%, 180 நாட்கள் கொண்ட கடன் கால எல்லையின் கீழ், மெற்றிக் தொன் ஒன்று 258.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Agricultural Resources and Investments Pte. Limited நிறுவனத்திடமிருந்தும்.