• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாதைகள் மற்றும் பாலங்கள் என்பவற்றின் நிர்மாணிப்பு
- நெடுஞ்சாலைகள் அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழுள்ள கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் நாடுமுழுவதுமுள்ள நடைபாதை பாலங்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாலங்கள் போன்ற 5,000 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த கிராமிய பாலங்கள் நிர்மாணிப்பானது அரசாங்கத்தின் கிராமிய வீதி வலயமைப்பின் 100,000 கிலோமீற்றர் புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.