• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலை மனையிடத்தில் உள்ள கழிவு உலோகப் பொருட்களை அப்புறப்படுத்துதல்
- காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலை மனையிடத்தில் சீமெந்து உற்பத்தி கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு ஆரம்பத் திட்டங்களை வகுத்துள்ளது. இதன்பொருட்டு இந்த மனையிடத்திலுள்ள கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி கைத்தொழிற்சாலை மனையிடத்தை சுத்திகரிப் பதற்கு உரியதாக இடப்பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டு சிபாரிசுகள் உள்ளடக்கப்பட்ட நிலைமை பற்றிய அறிக்கையினை சமர்ப்பிபதற்கு ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலை மனையிடத்திலுள்ள பயன்படுத்தமுடியாத கட்டடங்கள், கட்டமைப்புகள், இயந்திரசாதனங்கள், இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரின் மதிப் பீட்டின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்வனவு வழிமுறையினை பின்பற்றி அப்புறப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.