• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
– கைத்தொழில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 22 முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகை எல்லைக்குட்பட்டு 08 கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்குவதற்கு பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுக்களும் கைத்தொழில் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டு குழுவும் சிபாரிசு செய்துள்ளன. இந்த முதலீட்டாளர்களினால் 24,047.85 மில்லியன் ரூபாவும் 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் உரிய கருத்திட்டங்களில் முதலீடு செய்யவுள்ளதோடு, 3,326 நேரடி தொழில்வாய்ப்புகள் இந்தக் கருத்திட்டங்களின் ஊடாக பிறப்பிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த முதலீட்டாளர்களுக்கு காணித்துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.