• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் வலய ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள்
- வலய ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சருவதேச வர்த்தகத்தின் பிரதான அங்கமாவதோடு, கடந்த சில வருடங்களில் அவை எண்ணிக்கை அளவிலும் அதேபோன்று உட்சிக்கல் வாய்ந்தவையாகவும் அதிகரித்துள்ளது. இலங்கையும் சில இத்தகைய வர்த்தக உடன்படிக்கைகளை செய்துள்ளதோடு, சில உடன்படிக்கைகளின் கீழ் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியாமற் போனமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், தற்போது பேச்சுவார்தை மட்டத்திலுள்ள இத்தகைய உடன்படிக்கைகளை 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மீண்டும் மீளாய்வு செய்து அதற்கிணங்க, உரிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பிப்பதற்கும் புதிய வலய ரீதியிலான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.