• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள 'அபே கம' கிராமிய பாரம்பரிய கண்காட்சி மையத்தை செயல்திறனுடன் நடாத்திச் செல்தல்
- மத்திய கலாசார நிதியத்தின் கருத்திட்டமொன்றாக 'அபே கம' கிராமிய பாரம்பரிய கண்காட்சி மையமானது ஆரம்பம் முதல் இதுவரை நிறுவகிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது அதன் நிருவாகம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்ப கலைஞர் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏக்கர் 13 றூட் 03 பேர்ச்சர்ஸ் 25.1 விஸ்தீரணம் கொண்ட இந்த மையமானது குறித்தொதுக்கப்பட்ட பதவியணி, நிருவாகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக செலவுத் தலைப்பொன்று இல்லாமையினால் இதன் பணிகள் செயலிழந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், 'அபே கம' கிராமிய பாரம்பரிய கண்காட்சி மையத்தினை நடாத்திச் செல்வதற்கு குறித் தொதுக்கப்பட்ட பதவியணியினை நியமித்து முறையாக இந்த நிறுவனத்தை நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.