• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத பயணிகள் பெட்டிகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல்
- தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுமார் 700 புகையிரத பயணிகள் பெட்டிகள் தேவைப்படுவதோடு, எதிர்வரும் ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் இது சுமார் 800 புகையிரத பயணிகள் பெட்டிகள் வரை அதிகரிக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள புகையிரதப் பயணிகள் பெட்டிகள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளுக்கு உரியதாவதோடு, அவற்றில் 30 சதவீதமானவை முப்பது (30) வருடங்களும் 60 சதவீதமானவை 25-30 வருடங்களும் பழமைவாய்ந்தவையாவதோடு 10 சதவீதமானவை 12 வருடங்களுக்கு அல்லது அதற்கு குறைவான காலப்பகுதியில் சேவையில் ஈடுபட்டுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெறவுள்ள 160 பயணிகள் பெட்டிகள் மற்றும் திருத்த வேலைகள் கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள 140 பயணிகள் பெட்டிகள் மொத்த தேவையின் சுமார் 42 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றது. ஆதலால், மொத்த பெட்டிகளின் 50 சதவீதம் புதிய பெட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது புனரமைப்பதன் மூலமோ துரிதமாக பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கிணங்க, இந்த நிலைமைக்கு மாற்று வழியாக தனியார்துறையின் பங்களிப்புடன் 100 புகையிரதப் பயணிகள் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு அரசாங்க பெறுகை வழிகாட்டலைப் பயன்படுத்தி முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.