• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
- எதிராளி ஒருவரின் தவறுகை காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு 14 நாட்களுக்குள் குறித்த தவறுகைக்கு நியாயமான காரணங்கள் அவருக்கு இருந்தமை பற்றி வழக்காளிக்கான அறிவிப்புடன் நீதிமன்றத்திற்கு எதிராளியினால் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கையின் மீது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றிக் கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி எவரேனும் எதிராளி ஒருவருக்கு தாமதப்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்துவதற்கும் வழக்காளியின் நியாயமான கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் சாத்தியமுள்ளதென அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த பிரதிகூலமான நிலைமைய தவிர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையின் 88(2) ஆம் பிரிவைத் திருத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.