• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒழுக்காற்று விசாரணை அல்லது வேலை இதடை நிறுத்தத்திற்கு ஆளாகும் தனியார்துறை ஊழியர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்துதல்
- தனியார்துறை ஊழியர்களினால் செய்யப்படும் ஏதேனும் ஒழுக்காற்றுக்கு முரணான அல்லது முறைக்கேடான செயற்பாடுகள் காரணமாக வேலை இடை நிறுத்தத்திற்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையினை மேற்கொண்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படவேண்டிய கால எல்லை பற்றி தொழிற் சட்டங்களில் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் வேலை நிறுத்தத்திற்கு ஆளாகும் ஊழியர்களுக்கு பல்வேறுபட்ட பொருளாதார, சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமை தெரியவந்துள்ளது. ஆதலால், ஊழியர் ஒருவர் வேலை நிறுத்தத்திற்கு ஆளாகும் சந்தர்ப்பத்தில் அத்திகதி தொடக்கம் ஆறு (06) மாத காலத்திற்குள் இறுதி ஒழுக்காற்று கட்டளையினை வழங்குவதற்கும் உரிய குற்றச்சாட்டானது நிதி மோசடி ஒன்றல்லாத சந்தர்ப்பத்தில் ஊழியருக்கு அரைச் சம்பளம் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் விதத்திலுமான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்தும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.