• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கப்பல் எண்ணெய் வர்த்தகத்தை மீள ஆரம்பித்தல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமான 'Lanka Maritime Services Limited' நிறுவனத்தின் கீழ் கப்பல் எண்ணெய் விநியோக தனி உரிமையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பேணிவந்ததோடு, 2004 ஆம் ஆண்டில் இந்த வர்த்தகம் தனியார் துறைசார்பில் திறந்து விடப்பட்டது. இதற்கிணங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை துறைமுக அதிகாரசபையில் நடாத்திச் செல்லப்பட்ட சுங்கத்தீர்வை செலுத்தா பொருட்குத வசதிகள் தனியார் துறைக்கு விற்கப்பட்டதோடு, இதன் காரணமாக கப்பல் எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வௌியேறியுள்ளது. சில விநியோகஸ்தர்களினால் சிறிய அளவில் கப்பல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இந்த எண்ணெய் கையிருப்பானது ஜய கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியத்தில் (சுங்கத்தீர்வை செலுத்தா பொருட்குத) களஞ்சியப்படுத்தப்பட்டு இலங்கை சமுத்திர எல்லை ஊடாக பயணிக்கும் கப்பல்களுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் தொகையினை சாதகமான விலைகளின் கீழ் இறக்குமதி செய்து போட்டி விலைகளின் கீழ் உரிமப்பத்திரம் பெற்றுள்ள விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, போட்டி விலையின் கீழ் கப்பல் எண்ணெய் விநியோகிப்பதன் மூலம் நாட்டின் சமுத்திர எல்லை ஊடாக பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கு இயலுமாகும். இந்த நிலைமையின் கீழ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கப்பல் எண்ணெய் இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் மீண்டும் நுழைவது தொடர்பில் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.