• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதனப் பசளை உற்பத்தி மற்றும் விநியோக துறையில் அரசாங்கத்தின் தலையீட்டினை முறைப்படுத்தல்
- இலங்கையில் கமத்தொழிலை சேதனப் பசளை பாவனையின்பால் கொண்டு செல்லும் தேவை 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கைப் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையினை நடைமுறைப் படுத்துவதற்கான திறமுறை வேலைத்திட்டத்தினை கையாள்வதற்கு நவீன தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் சருவதேச தரங்களுக்கு அமைவாக சேதனப் பசளை உற்பத்தி, விற்பனை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலுள்ள அரசாங்க நிறுவனமொன்று இருக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை சேதனப் பசளை மற்றும் உயர் மரபியல் இரசாயன பசளை உற்பத்தி செய்யும், விநியோகிக்கும் இது தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.