• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகனங்கள் (மட்டுப்படுத்தல்) ஒழுங்குவிதிகள் உள்ளடக்கி வௌியிடப்பட்ட 2020‑01‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2160/33 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- கொழும்பு - ஹங்வெல்ல வீதியின் (AB010) தொட்டலங்க சந்தியிலிருந்து கொஹிலவத்த சந்திவரையிலான வீதிப் பகுதியின் சேதவத்த புகையிரத பாலத்துக்கு கீழாக பயணிக்கும் சில கொள்கலன் வாகன சாரதிகளின் கவனக் குறைவினால் இந்தப் புகையிரத பாலம் சேதம் அடைகின்றமை பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பயங்கரமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், நிலத்திலிருந்து 3.2 மீற்றரை விட உயரம் கொண்ட வேறு வாகனங்கள் மற்றும் தரையிலிருந்து 3.2 மீற்றரை விட கூடுதலாக பொதியேற்றப்பட்ட உயரத்துடன் கூடிய வாகனங்கள் இந்த வீதிப் பகுதியால் பயணிப்பதை தடைசெய்வதற்கும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் செல்வதற்கான மாற்று வீதிகளை அறிமுகப்படுத்துவதற்கும் மோட்டார் வாகன சட்ட்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்ட 2020‑01‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2160/33 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.