• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
BIMSTEC உறுப்பு நாடுகளின் இராஜதந்திர கல்வி / பயிற்சி நிறுவனங் களுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- வங்காள விரிகுடா வலயத்தில் ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்வதற்கான அமைப்பொன்றாக 1997 ஆம் ஆண்டில் பல்துறை தொழினுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் அமைப்பு (BIMSTEC) ஆரம்பிக்கப்பட்டது. இற்றைவரை இலங்கை உட்பட 7 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த உறுப்பு நாடுகளினால் இராஜதந்திர கல்வி / பயிற்சி நிறுவனங்களுக் கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையில் நடாத்துவதற்குள்ள 5 ஆவது BIMSTEC மாநாட்டின் போது உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையை அங்கீகரித்துக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.