• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளையும் கட்டளைகளையும் திருத்துதல்
- 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையுடன் உசாவுதலைச் செய்து அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டளைகளை வௌியிடும் அதிகாரம் நிதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரானவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2017 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, 2017 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க , 2017 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க கட்டளைகள் வௌியிடப்பட்டுள்ளதோடு, இந்த சட்டத்தின் 8 ஆம் பிரிவு மற்றும் 31 ஆம் பிரிவு என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளும் வௌியிடப்பட்டுள்ளன. இந்த கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகளை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பின்வரும் கட்டளைகளை வௌியிடுவதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும்.

i 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அந்நிய செலாவணி (இலங்கையில் வதிந்துள்ள ஒருவரினால் இலங்கைக்கு வௌியே செய்யப்படும் மூலதன கொடுக்கல் வாங்கல் வகை) கட்டளை.

ii 2021ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க அந்நிய செலாவணி (இலங்கையில் வதிவற்ற ஒருவரினால் இலங்கையில் செய்யப்படும் மூலதன கொடுக்கல் வாங்கல் வகை) கட்டளை.

iii 2021 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அந்நிய செலாவணி (புலம்பெயர்ந்துள்ளவர்களினால் நிதி அனுப்புதல்) கட்டளை.

iv 2021 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க அந்நிய செலாவணி (பல்வேறுபட்ட மூலதன கொடுக்கல் வாங்கல் வகை) கட்டளை.

v 2021 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அந்நிய செலாவணி (வௌிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நோக்கத்திற்காக கணக்குகளை ஆரம்பித்தல், நடாத்திச் செல்தல்) கட்டளை.

* இந்த சட்டத்தின் 8 ஆம் பிரிவுக்கும் 31 ஆம் பிரிவுக்கும் அமைவாக கட்டளைகளை ஆக்குதல்.