• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
– அந்நிய செலாவணி விகிதாசாரத்திற்கு தாக்கம் செலுத்தக்கூடிய சில இறக்குமதி பொருட்களை மட்டுப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள 2021 சனவரி மாதம் 05 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.