• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசி மருந்து USP 0.9% w/v 500ml புட்டிகள் 14,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- நோயாளிகளின் குருதியின் அளவு குறையும் சந்தர்ப்பத்தில் சிகிச்சசையளிப் பதற்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச ரீதியில் போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த கேள்வியை சீனாவின் M/s Sichuan Kelun Pharmaceutical Co. Ltd., நிறுவனத்திற்கு மொத்த செலவு மற்றும் கேள்வு விலையான 2.79 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.