• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் முதலாவது இயந்திர பொறிமுறை நீர் மின் பிறப்பாக்க நீர் மின் நிலையத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத் தகவாய்வினை மேற்கொள்ளல்
– சில புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்கள் மூலம் மின்சாரம் பிறப்பிக்கப்படும் போது நிகழும் மாற்றமடையும் தன்மை மற்றும் நிலையானதாக இல்லாமை போன்ற காரணங்களினால் இத்தகைய வலுசக்தி நிலையங்களை பிரதான மின்சார முறைமையில் சேர்த்து நடைமுறைப்படுத்தும் போது தொழிநுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கும் மேலதிக மின் பிறப்பாக்கல் கொள்ளளவை களஞ்சியப்படுத்துவதற்கும் "இயந்திர பொறிமுறை நீர் மின் பிறப்பாக்க நீர் மின் நிலையத்தினை" தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. 2018 - 2037 நீண்ட கால மின் பிறப்பாக்கல் திட்டத்தின் கீழ் இயந்திர பொறிமுறை நீர் மின் பிறப்பாக்க நீர் மின் நிலையமொன்றை 03 கட்டங்களின் கீழ் 2025 ஆம் ஆண்டிலிருந்து முன்னோக்கியதாக நடைமுறைப்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சாத்தியத்தகவாய்வுக்கு அமைவாக உத்தேச மின்நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மாஓயா ஆற்றுப்படுகையின் அரநாயக்க பிரதேசமும் கண்டி வெவதென்ன பிரதேசமும் ஏற்றதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களிலிருந்து மிகப் பொருத்தமான இடத்தினை இனங்கண்டு இது தொடர்பில் முழுமையான சாத்தியத்தகவாய்வொன்றினை மேற்கொள்ள வேண்டுமென்பது இலங்கை மின்சார சபையின் கருத்தாகும். இதன் பொருட்டு தேவையான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் இயங்கும் "பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறமை மேம்பாட்டு முதலீட்டு கருத்திட்டத்தில்" சேமிப்பாகவுள்ள நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்திற்குரியதாக முழுமையான சாத்தியத்தக வாய்வொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.