• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி சட்டத்தை ஆக்குதல்
- 2003 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மூலம் இலங்கையில் பெற்றோலியம் மற்றும் வாயு அகழ்வு மற்றும் உற்பத்தி கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கமானது விரிவாக இனங்காணப்பட்டுள்ள போதிலும் இந்த துறைகளை முகாமிப்பதற்கு பொருத்தமான வரைவிலக்கணங்கள் செய்யப்படாமை தெரியவந்துள்ளது. இதற்கிணங்க உரிய தரப்பினர்களுடன் நிலவிய கலந்துரையாடலின் போது இந்த சட்டத்தை நீக்கி தேவையான பொருள்கோடல், ஒழுங்குறுத்துகை மற்றும் தேசிய செயற்பாட்டாளர் போன்றவற்றை வெவ்வேறாக குறிப்பிடுவதற்கு புதிய சட்டமொன்றை தயாரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2003 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டமொன்றை வரைவதற்காக மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.