• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரித்தல்
- '2019-2021 பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்தில்' உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 50/- ரூபாவைக் கொண்ட நிலையான விலைக் கொடுப்பனவுடன் 750/- ரூபாவைக் கொண்ட நாட்சம்பளம் மற்றும் விளைவு பெருக்கம் தொடர்புபட்ட உரிய கிலோகிராம் அளவானது விஞ்சப்படும் சந்தர்ப்பத்தில் 'Over Kilo Rate' என்னும் பெயரில் மற்றுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து சம்பளம் பெறுவதற்கு தற்போது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு உரிமையுள்ளது.

2020 நவெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் பெருந்தோட்டதுறைக்கு 1,000/- ரூபா சம்பளம் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு '2019-2021 பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தத்தில்' கைச்சாத்திட்டுள்ள தரப்பினர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த கூட்டு உடன்படிக்கையின் ஒரு தரப்பான பெருந்தோட்டத்துறையாளர்களின் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாட்சம்பளத்தை 920/- ரூபாவாக அதிகரிப்பதற்கு பிரேரித்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தினை 1,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.