• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்ட சமுதாயம் முழுவததையும் குறியிலக்காக கொண்டு மிகவும் பாதுகாப்பான இருப்பிடங்களை உரித்தாக்குவதற்காக நடைமுறையிலுள்ள பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தை மாற்றுதல்
- பெருந்தோட்ட சமுதாயத்திற்கு லயன் அறைகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் 'பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம்' 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பல்வேறுபட்ட வழிமுறைகளின் ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கத்தின் அனுசரணையின் மீது 7 பேர்ச்சர்ஸ் காணி உரிமையுடன் 550 சதுரஅடி வீடொன்றினை வழங்கும் கருத்திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் பங்களிப்புடன் 550 சதுரஅடி வீடொன்றினை வழங்கும் கருத்திட்டம் என்னும் அடிப்படையில் இரண்டு கருத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த திட்டங்களின் கீழ் வீடுகளை வழங்கும்போது பின்பற்றப்படும் நடவடிக்கைமுறைகள் மாறுபடுகின்றமையினால் முரண்பாடுகள் எழுந்துள்ளதன் காரணமாக பெருந்தோட்ட சமூகத்திற்கு வீடுகளை வழங்கும்போது பொதுவான வழிமுறையொன்றினை பின்பற்றுவதற்கும் அதன் கீழ் பின்வருமாறு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* தற்போதுள்ள லயன் அறைகளை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணித்தல்.

* வௌ்ளப்பெருக்கு / மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகள் காணப்படுமாயின் அத்துடன் லயன் அறைகள் அமைந்துள்ள இடங்களில் இடவசதி போதுமானதாக இல்லையாயின் வேறு இடங்களில் வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

* பிற்காலத்தில் உரிய வீடுகளை இரண்டு மாடிகளாக கட்டக்கூடிய விதத்தில் 550 சதுர அடிகளைக் கொண்ட வீடுகளுக்கான முதலாம் கட்டத்தை 1.3 மில்லியன் ரூபாவினை செலவு செய்து நிர்மாணித்தல்.

* பயனாளிகள் சகலருக்கும் மிருக வளர்ப்பு மற்றும் தோட்டச் செய்கை என்பன பொருட்டு மேலதிகமாக 03 பேர்ச்சர்ஸ்களை ஒதுக்கிக் கொடுத்தல்.

* வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டிலான பெறுமதியின் 50 சதவீதத்தை மாத்திரம் பயனாளிகளிடமிருந்து அறவிட்டுக் கொள்தல் மற்றும் அதற்காக 20 வருட காலத்தினை வழங்குதல்.

* லயன் அறைகள் அமைந்துள்ள இடங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை அதற்கண்மையில் வேறு இடமொன்றில் தற்காலிகமாக குடியிருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தல்.